என் மலர்
செய்திகள்

சமயபுரம் கோவில் சம்பவம்: ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு- ஸ்ரீரங்கம் ஜீயர் பேட்டி
திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மசினி மிதித்ததில் பாகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஸ்ரீரங்கம் ஜீயர் தெரிவித்தார்.
திருச்சி:
திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மசினி மிதித்ததில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானை மசினிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் கோவில் கருவறையில் நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் பை ஒன்றை வீசினார். இதனால்தான் பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு கோபம் ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SamayapuramMariammanTemple #ElephantMahout #ElephantMasini

Next Story