என் மலர்

  செய்திகள்

  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
  X

  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கிருஷ்ணகிரி அணை மதகுகளை உடனடியாக சீரமைத்து, வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இந்த அணையின் 8 மதகுகளையும் மாற்றிடும் வகையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களை, அரசு விதிக்கு நேர்மாறாக நியமனம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்துகொள்வது. இரண்டு ஆண்டுகளாக ஆணையர் இல்லாமல் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதுடன், உடனடியாக தமிழக அரசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ஆணையரையும், பிற அலுவலர்களையும் நியமனம் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்வது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், துணை அமைப்பாளர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  Next Story
  ×