search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - முதன்மை கல்வி அதிகாரி மகிழ்ச்சி
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - முதன்மை கல்வி அதிகாரி மகிழ்ச்சி

    சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் 2-ம் இடமும், விருதுநகர் மாவட்டம் 3-ம் இடமும் பெற்று உள்ளன.

    10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இந்த முறை சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 98.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் 275 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9 ஆயிரத்து 395 பேரும், மாணவிகள் 9 ஆயிரத்து 442 பேர் என 18 ஆயிரத்து 837 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயராஜ் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    வருங்காலத்திலும் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×