என் மலர்
செய்திகள்

பம்மலில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் பலி - கடையில் டீ குடித்த போது ஏற்பட்ட பரிதாபம்
பம்மலில் கோழிகளை ஏற்றி வந்த மினி லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதில் டீக்கடையில் நின்று டீ குடித்த கொண்டிருந்த இருவர் மீது மோதியதில் அவர்கள் பலியாயினர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பம்மல் சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். டிரைவர்.
இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குன்றத்தூர்- பல்லாவரம் சாலையில் உள்ள டீக்கடையில் ரோட்டோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தார். அவருடன் குன்றத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வமும் டீ குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திண்டிவனத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. திடிரென்று லாரி டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
ரோட்டோரம் டீ குடித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், செல்வம் மீது லாரி மோதியது. அதன் பின் டிரைவர் லாரியை நிறுத்தினார்.
இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பலியானார்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ராஜவேலை கைது செய்தனர். #tamilnews

Next Story