என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது
    X

    காஞ்சீபுரம் அருகே இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது

    காஞ்சீபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள திருமுக்கூடலில் வட மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கணவருடன் தங்கி உள்ளார். அவர்கள் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று இளம்பெண் மட்டும் வீட்டில் இருந்தார். அவரது கணவர் வேலைக்காக வெளியில் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பிரவீண்குமார் (23) என்பவர் திடீரென வீட்டுக்குள் புகுந்தார். அவர் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். மேலும் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி சென்று விட்டார்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் கணவரிடம் கூறி கதறி துடித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டில் தனியாக இருந்த வட மாநில இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×