search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் - சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை
    X

    எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் - சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எர்ணாவூர் நாராயணன் தனது பிறந்த நாளையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    திருவொற்றியூர்:

    சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தனது 62-வது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னதாக வண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பிறந்த நாளையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மணலி பாலசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்க தேர் இழுத்தனர்.

    தண்டு மாரியம்மன் கோவிலில் முத்துக்கனி தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. சமத்துவ மக்கள் கழக மகளிரணி சார்பில் 62 சீர்வரிசை வழங்கப்பட்டது.

    எர்ணாவூர் நாராயணனுக்கு மனைவி லதா நாராயணன், மருமகன்கள் வருண்குமார், கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, மகன் கார்த்தி, மகள்கள் பாப்பாத்தி, ஷகிலா, மருமகள் உஷா மற்றும் பேரன், பேத்திகள், மாநில பொதுச்செயலாளர் கு.இளஞ்சேரன், பொருளாளர் எம்.கண்ணன், நாடார் பேரவை கரு.சின்னதுரை, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மா. சுரேஷ்பாலாஜி, தொழிற் சங்க அமைப்பு செயலாளர் ஜஸ்டின் மற்றும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பல்வேறு கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×