என் மலர்

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் 15 பவுன்- ரூ.5 லட்சம் கொள்ளை
    X

    முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் 15 பவுன்- ரூ.5 லட்சம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரையா (வயது 70) விவசாயி. இவரும் அவரது மனைவியும் நேற்று இரவு காற்றுக்காக வீட்டில் முன்பக்கம் படுத்திருந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் வீரையா முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை- பணம் கொள்ளையடித்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், பயிற்சி டி.எஸ்.பி. நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையனின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

    விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×