என் மலர்
செய்திகள்

அரியலூரில் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
அரியலூரில் ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 6யூனியன், 2நகராட்சி, 2 பேரூராட்சி, 201 கிராம ஊராட்சிகள் உள்ளது. 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் தலைநகரமாக அரியலூர் திகழ்ந்து வருகின்றது.
அரியலூரில் கிராமபுற கூட்டுறவு வங்கிகளை தவிர்த்து 84 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 14 ஏ.டி.எம். மையங்கள் பூட்டப்பட்டுள்ளது. 20 ஏ.டி.எம். மையங்கள் பாதி திறந்த நிலையில் உள்ளது. மற்ற ஏ.டி.எம்.மிலும் சரியான முறையில் பணம் வைப்பதில்லை. பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து, புதிய நோட்டுகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏ.டி.எம். எந்திரம் சீரமைக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது.
சுமார் 30 லட்சம் வரை பணம் நிரப்பி வந்த ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது சுமார் 5லட்சம் வரை பணம் நிரப்புவதால் ஒருசில மணிநேரங்களில் தீர்ந்துவிடுகின்றது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் போதுமான அளவு பணம் நிரப்ப வேண்டும், காவலரை நியமிக்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






