என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: 1½ வயது குழந்தை பலி
பேரையூர்:
மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). இவருக்கு சவீதா (34) என்ற மனைவியும், நரேஷ் (11), கிருஷ்ணமீனா (1½ வயது) என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று திருமங்கலம் அருகே நெடுங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு ராம கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் குடுத்பத்துடன் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மேலக்கோட்டை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்து ரத்த வெள்ளதில் மிதந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி குழந்தை கிருஷ்ணமீனா பரிதாபமாக இறந்தாள். ராமகிருஷ்ணன், சவீதா, நரேஷ் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விருதுநகர் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.