என் மலர்

  செய்திகள்

  தென்னவன்
  X
  தென்னவன்

  பேஸ்புக் மூலம் காதல்: சட்டக்கல்லூரி மாணவி அறையில் தங்கிய காதலன் மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் சட்டக்கல்லூரி மாணவியின் அறையில் தங்கிய பேஸ்புக் காதலன் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.#FacebookLover
  திருவொற்றியூர்:

  வேதாரண்யத்தை சேர்ந்தவர் தென்னவன் (வயது 23). என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் பூந்தமல்லியில் நண்பர்களுடன் தங்கி அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

  இவருக்கும் திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் வசிக்கும் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 22 வயதுடைய மாணவிக்கும், ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். மாணவியின் சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும்.

  இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கேரள மாநிலத்துக்கு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் இருந்தார். இதுபற்றி அவர், காதலன் தென்னவனுக்கு தகவல் தெரிவித்தார்.

  நேற்று இரவு மாணவியின் வீட்டுக்கு தென்னவன் வந்தார். பின்னர் இருவரும் ஒரே அறையில் இருந்தனர். அப்போது தென்னவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தென்னவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே தென்னவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தென்னவனின் மரணத்திற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார்? என்பது குறித்து மாணவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து வருவதால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். #FacebookLover
  Next Story
  ×