என் மலர்

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நேற்று 34.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் குறைந்து 34.72 அடியாக சரிந்தது.
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1-ந் தேதி 361 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று நீர்வரத்து 350 கன அடியாக இருந்தது.

    இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 199 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 34.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 34.72 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மழை பெய்யுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×