என் மலர்

  செய்திகள்

  டாஸ்மாக் மேற்பார்வையாளர் 2 பேரை அரிவாளால் வெட்டி ரூ.7½ லட்சம் கொள்ளை
  X

  டாஸ்மாக் மேற்பார்வையாளர் 2 பேரை அரிவாளால் வெட்டி ரூ.7½ லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் 2 பேரை அரிவாளால் வெட்டி ரூ.7½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள ரே‌ஷன் உணவு பொருள் சேமிப்பு குடோன் அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இங்கு செங்கோட்டையை சேர்ந்த சங்கர் (வயது49), கல்லிடைக்குறிச்சி பாலசந்திரன் (44) ஆகியோர் மேற்பார்வையாளராக உள்ளனர்.

  நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கடையில் விற்பனையான பணம் ரூ.7 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கப்பணத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

  அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஏறி கல்லிடைக்குறிச்சி செல்வதற்காக புறப்பட்டனர். கடையை விட்டு சிறிது தூரம் சென்றதும், 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவர்களை வழி மறித்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் தப்பி ஓடுவதற்குள், அவர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டி பணப்பையை பறித்துக் கொண்டு ஓடிவிட் டனர்.

  பலத்த காயம் அடைந்த சங்கர், பாலசந்திரன் ஆகியோரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×