என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்த 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி:
கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவர் அரியாங்குப்பத்தில் தங்கி வில்லியனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று இரவு விஷ்ணு தனது நண்பர்கள் சிரோஜ் பாபு, ராகுல் ஆகியோருடன் புதுவைக்கு சினிமா பார்க்க வந்தார். பின்னர் சினிமா பார்த்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் அரியாங்குப்பம் திரும்பி கொண்டு இருந்தனர்.
முருங்கப்பாக்கம் பாலத்தில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென விஷ்ணுவிடம் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதையடுத்து விஷ்ணு செல்போனை பறித்து சென்றவர்களின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணுடன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஷ்ணுவிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் மடுவுபேட்டை சேர்ந்த கார்த்திக் (26) மற்றும் ரெயின்போ நகரை சேர்ந்த அருண் பாண்டியன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.