என் மலர்

  செய்திகள்

  கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்
  X

  கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கும்பகோணம்:

  அரியலூர் மாவட்டம், சாலைரோடு மீராரெட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவரது மகள் சாந்தினி (18). கும்பகோணத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

  கடந்த 28-ந் தேதி தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் கல்லூரி மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

  இதுகுறித்து குணசேகரன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

  இதேபோல் அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம், முத்து லெட்சுமி தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் சரண்யா (வயது 18). கும்பகோணம் பெண்கள் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரும் தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பூபதி மற்றும் அவரது சகோதரர் அனந்தராமன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர்.

  அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யாராவது கடத்தி சென்றனரா? என்று மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×