என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூவத்தூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    கூவத்தூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

    கூவத்தூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    வேலூர் பொன்னை பகுதியை சேர்ந்தவர் போஸ் குமார் (வயது 20). கூவத்தூரை அடுத்த சீக்கினாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் உடன் படிக்கும் நண்பர் அருண் லோகேசுடன் மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வந்தார். சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது பாண்டிச் சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென பைக் மீது மோதியது.

    இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே போஸ் குமார் உயிரிழந்தார். படுகாயம்அடைந்த அருண் லோகேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×