என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பெரியசாமி மாநாட்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தலைவராக ராமலிங்கம், மாவட்ட செயலாளராக செல்வராஜ், மாவட்ட பொருளாளராக அலமேலு, மாநில செயற்குழு உறுப்பினராக சுமதி ஆகியோர் அரியலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    முன்னதாக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் செல்வி வரவேற்றார். முடிவில் மாநில பொது செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
    Next Story
    ×