என் மலர்

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் மெரினா போராட்டம் சேப்பாக்கத்துக்கு மாற்றம் - வேல்முருகன்
    X

    காவிரி விவகாரத்தில் மெரினா போராட்டம் சேப்பாக்கத்துக்கு மாற்றம் - வேல்முருகன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரி விவகாரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐகோர்ட் அனுமதி அளிக்காததால் சேப்பாக்கத்தில் போராட்டம் நடக்கும் என வேல்முருகன் அறிவித்துள்ளார். #CauveryProtest
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். மெரினாவில் போராட்டங்கள் நடத்த சென்னை ஐகோர்ட் நேற்று தடை விதித்தது.

    இந்நிலையில், மெரினாவில் இன்று அறிவிக்கப்பட்ட போராட்டம் சேப்பாக்கத்தில் நடக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்தார். போராட்டத்தை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #CauveryProtest
    Next Story
    ×