என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்டி வதைக்கும் வெயில்- பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து 13 பயணிகள் காயம்
    X

    வாட்டி வதைக்கும் வெயில்- பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து 13 பயணிகள் காயம்

    கடலூர் அருகே கடும் வெயில் காரணமாக பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்ததில் 13 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து இன்று மதியம் சேமக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து சின்ன சேமக்கோட்டை அருகே சென்றபோது பஸ்சின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டெப்னி டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து, டயர் உள்ளே விழுந்துள்ளது.



    இதில் 13 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த டயர் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×