search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்- டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
    X

    தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்- டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

    குட்கா ஊழல் தொடர்பாக டி.ஜி.பி. பதவி விலக வலியுறுத்தி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.#GutkhaScam #DMKprotest #DGPOffice
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியது. டி.ஜி.பி. மீதான குற்றச்சாட்டு என்பது விசாரணை அளவில்தான் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணையை டி.ஜி.பி. சந்திப்பார் என்றும், அவர் பதவி விலக வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இப்போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் கடற்கரை சாலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  காந்தி சிலை அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #GutkhaScam #DMKprotest #DGPOffice
    Next Story
    ×