என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே வாலிபரை வெட்டி பணம் பறித்த 4 பேர் கைது
    X

    செங்கல்பட்டு அருகே வாலிபரை வெட்டி பணம் பறித்த 4 பேர் கைது

    செங்கல்பட்டு அருகே வாலிபரை வெட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா சிட்டி தொழிற் பூங்காவில் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சய் வேலை பார்த்து வருகிறார்.

    இரவு அவர் பணிமுடிந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கத்தியால் வெட்டினர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சஞ்சய்யிடம் கொள்ளை நடந்த அன்று பரனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சிவா, தினேஷ் என்பதும் நண்பர்களுடன் மகேந்திரா சிட்டி தொழிற் பூங்காவில் சஞ்சய் என்பவரிடம் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததும் தெரிந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான வல்லத்தை சேர்ந்த தென்னரசு, நவீன்ராஜ், கரண்குமார், அனுமந்த புத்தேரி துளசிதரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 2½ பவுன் செயின், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டு தப்பியபோது விபத்தில் சிக்கியதால் அவர்கள் பிடிபட்டு உள்ளனர்.

    Next Story
    ×