என் மலர்

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar #CauveryManagementBoard
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு கால தாமதம் செய்துவரும் நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாததால் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும். காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. போல் யாரும் இந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.

    அரசு நல்லதே செய்தாலும் அதை குறை சொல்வதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. தமிழக நலனுக்காக அனைவரும் ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #CauveryManagementBoard
    Next Story
    ×