என் மலர்
செய்திகள்

சேலம் அருகே மின்சாரம் தாக்கி விசைத்தறி தொழிலாளி பலி
சேலம்:
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). விசைத் தறிதொழிலாளியான இவர் வீட்டில் பவர் லூம் வைத்து ஜரிகை பட்டு உற்பத்தி செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் இவர் பவர் லூமில் பட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பவர் லூமில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
இதை கவனிக்காத குமார் தொடர்ந்து பட்டு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி குமார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த போது, மின்சாரம் தாக்கியதில் குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இது பற்றி அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குமார் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.