என் மலர்
செய்திகள்

கல்விதுறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது- அரசு கொறடா பேச்சு
கல்விதுறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் பேசினார்.
அரியலூர்:
அரியலூர் அருகே காத்தான் குடிகாட்டில் சென்னை அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரியான அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஆதி லட்சுமி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குனர் அருண்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் பதிவாளரும், விளையாட்டு வாரிய தலைவருமான செல்லதுரை, எம்.பி. சந்திர காசி, எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம், கல்லூரி துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கல்விதுறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கல்வி கற்ற மனிதன்தான் சிறந்த மனிதனாக விளங்க முடியும். கல்விதுறைக்கு அதிக நிதி ஒதுக்கியது ஜெயலலிதா தான். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதாதான். அவர் விட்டு சென்ற பணியை தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான தமிழக அரசு கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசாங்க தேர்வுகளில் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகலாம். முயற்சியை மேற்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கல்வி அறிவுடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அது உடல் நலத்திற்கு நல்லது.ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை. மாணவர்கள் அரசியலுக்கும் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மின்னியல்துறை தலைவர் ஷோபனா தேவி நன்றி கூறினார்.
Next Story






