என் மலர்
செய்திகள்

ஊத்தங்கரை அருகே இளம்பெண் தற்கொலை
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கானம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (வயது 30).
நேற்று மதியம் வீட்டில் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சித்ரா இனிமேல் கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து வயலுக்கு தெளிக்கக் கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார்.
விஷம் உடல் முழுவதும் பரவியது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சித்ராவை கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






