என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரங்கம்பாடி அருகே மீன்பாடி வண்டியில் மறைத்து 4300 மதுபாட்டில்கள் கடத்தல்
    X

    தரங்கம்பாடி அருகே மீன்பாடி வண்டியில் மறைத்து 4300 மதுபாட்டில்கள் கடத்தல்

    தரங்கம்பாடி அருகே மீன்பாடி வண்டியில் மறைத்து 4300 மதுபாட்டில்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    காரைக்காலிருந்து தரங்கம்பாடி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்த படுவதாக தனி பிரிவு ஏட்டு சரவணபவன், பொறையார் போலீசார் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் தரங்கம்பாடி அருகே ராஜூவ்புரம் என்ற இடத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மீன்பாடி வண்டியை நிறுத்த முயன்றனர். ஆனால் அது நிற்காமல் செல்லவே அதனை போலீசார் விரட்டி சென்றனர். காத்தான் சாவடி என்ற இடத்தில் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது தப்பி ஓட முயன்ற டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரமணன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் ஓட்டிவந்த மீன்பாடி வண்டியை சோதனை செய்த போது அதில் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே 89 அட்டை பெட்டிகளில் 4300 குவார்ட்டர் மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வாகனத்தையும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் ரமணனை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

    Next Story
    ×