என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் மாணவரை தாக்கி கடத்த முயற்சி- 3 பேர் கைது
காரைக்குடியில் மாணவரை தாக்கி கடத்த முயன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செல்ல துரை. இவருடைய மகன் மெல்வின் (வயது 17). நாச்சியப்ப சுவாமிகள் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்.
இதே பாலிடெக்னிக்கில் இலுப்பைகுடி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் சிவக்குமார் (22) படித்து வந்தார். இவருக்கும், மெல்வினுக்கும் பஸ்சில் செல்லும்போது அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தில் இலுப்பைகுடி பஸ் நிறுத்தத்தில் மெல்வின் நின்றபோது சிவக்குமார், தனது நண்பர்கள் சங்கர் (21), கார்த்தி (21), நந்தகுமார் (17) ஆகியோருடன் வந்து வாக்குவாதம் செய்தார்.
அப்போது 4 பேரும் சேர்ந்து மெல்வினை தாக்கியதோடு இருசக்கர வாகனத்தில் கடத்தவும் முயன்றனர். அவர் கூச்சலிட்டதை பார்த்து அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து மெல்வினை மீட்டனர்.
இது குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீசில் மெல்வின் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிவக்குமார், கார்த்தி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews

Next Story