என் மலர்
செய்திகள்

செம்மஞ்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை
செம்மஞ்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராஜா (40). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ராஜா தினமும் குடிபோதையில் வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை 5மணி அளவில் ராஜாவின் மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மனைவி வேலைக்கு செல்கிறார், தனக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற மன உளைச்சலில் அதிகாலையில் மதுஅருந்தி விட்டு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






