என் மலர்
செய்திகள்

கடலூரில் சாராயம் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சாராயம் கடத்திய வாலிபர் மீது பல்வேறு வழக்கு உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையில் போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சோதனை செய்தனர். அப்போது கடலூர் முதுநகர் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் 250 லிட்டர் சாராயம் கடத்தி சென்றது. தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சிறைச் சாலையில் அடைத்தனர்.
இவர் மீது கடலூர் மதுவிலக்கு, சிதம்பரம் மதுவிலக்கு மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் குற்ற செயலை கட்டுபடுத்துவதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை கலெக்டர் தண்டபாணி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையொட்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.
Next Story






