என் மலர்
செய்திகள்

மொடக்குறிச்சியில் பனிச்சுமையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் பேசினார்.
அவர் கூறும்போது, “தமிழக அரசு அரசு அலுவலகங்களில் கீழ்நிலைப்பணியாளர் இடங்களை நிரப்பாமல் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தருவதாக ஏமாற்றி வருகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டதும், காலியான இடங்களை நிரப்புவதில்லை.
இதனால் இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது. பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கிறது. இதனை தவிர்க்க காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆள் பற்றாக்குறையை நீக்க முன்வர வேண்டும்” என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பூபதி, சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் அருள்மாணிக்கம், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட 12பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews

Next Story