என் மலர்
செய்திகள்

கிழக்கு கடற்கரைசாலையில் விபத்து- சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த பெருமாள்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பழுதடைந்த பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற திருவாரூரை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 70) மீது சென்னையை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து நடந்த அடுத்த சில மணி நேரத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்து ரோட்டில் விழுந்தனர்.
உடனே அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் தீபேஸ்வர் (20), லியாண்டர் (19) என்று தெரியவந்தது. தீபேஸ்வர் கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். லியாண்டர் வண்டலூர் அருகே உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். காயம் அடைந்தவர்கள் பெயர் விக்டர், அபிஷேக் ஆகும். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






