என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது
பண்ருட்டி அருகே வீட்டில் வைத்து சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கடாம்புலியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மாளிகம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பத்மநாபன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews

Next Story