என் மலர்

  செய்திகள்

  திருச்சிற்றம்பலம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
  X

  திருச்சிற்றம்பலம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சிற்றம்பலம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

  திருச்சிற்றம்பலம்:

  திருச்சிற்றம்பலம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருச்சிற்றம்பலம் மின் வாரியத்தில் இருந்து சுமார் 25-க்கும் ஏற்பட்ட நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

  திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம் நரியங்காடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. தற்சமயம் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. குடிநீர், விவசாயப்பணிகள் உள்பட அனைத்து தேவைகளுக்காகவும் மின்சாரத்தை நம்பியே உள்ளனர்.

  இந்நிலையில், இரவு பகல் எந்நேரமும் முன் அறிவிப்பு இன்றி மின்தடை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் பல மணிநேரங்களுக்கு பிறகே மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு உள்பட அனைத்து அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, மின் விநியோகத்தை முன் அறிவிப்பு செய்து முறைப்படுத்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சிற்றம்பலம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×