என் மலர்

  செய்திகள்

  தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் 2 பேர் நசுங்கி பலி
  X

  தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் 2 பேர் நசுங்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் இன்று மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). வல்லம் அருகே நாகப்ப உடையான் பட்டியை சேர்ந்தவர் சரவணன்(45). இருவரும் நண்பர்கள்.

  இந்த நிலையில் சரவணன் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பெருமாளை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் குடமுருட்டி பகுதிக்கு சென்றார். பின்னர் காலை 11 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார்.

  அப்போது வல்லம் முதலைமுத்துவாரி அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில மோட்டார் சைக்கிளில் இருந்த பெருமாள், சரவணன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

  விபத்தில் 2 பேர் பலியானதை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே விபத்தில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

  விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து லாரியில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர்.

  விபத்தில் பலியான பெருமாள் திருமண புரோக்கர் ஆவார். விபத்து பற்றி வல்லம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×