என் மலர்

  செய்திகள்

  பொள்ளாச்சி அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பல்
  X

  பொள்ளாச்சி அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.
  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி அருகே உள்ள நாலாம் மூலை சுங்கம் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி முன் புறம் 10 வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் ஓடு, சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவற்றால் அமைக்கப்பட்டு இருந்தது.

  நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவியது. இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் நாகராஜ், சரஸ்வதி, தங்கவேல், ரவி, மாரியம்மாள் ஆகியோர் வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.

  தீ விபத்தில் அங்கிருந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட், 3 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ. 1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

  இது குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  Next Story
  ×