என் மலர்

  செய்திகள்

  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி பலி
  X

  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
  பொம்மிடி:

  பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆவாரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). இதேபகுதியை சேர்ந்தவர் இவருடைய நண்பர் செல்வம் (30). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி நோக்கி சென்றனர். வெங்கடசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

  இந்த விபத்தில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்வம் படுகாயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

  இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
  Next Story
  ×