என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
  X

  ஆண்டிப்பட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  தேனி:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள வெள்ளிய தேவன்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் நிவேதா (வயது 13). ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா பிறந்த அதே நாளில் விபத்தில் இறந்து விட்டார்.

  கணவரை இழந்த நிவேதாவின் தாய் அவரை கைக்குழந்தையாக விட்டு விட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் தாத்தா சிங்கராஜ் என்பவரது பராமரிப்பில் நிவேதா வளர்ந்து வந்தார்.

  தாய், தந்தை இல்லாமல் வளர்ந்து வந்த நிவேதாவுக்கு கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல் ஏற்பட்டு வந்தது. அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று மாலை தனது வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் மாணவியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
  Next Story
  ×