என் மலர்

  செய்திகள்

  போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்னையில் இருந்து மாற்றம்
  X

  போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்னையில் இருந்து மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மதுரை தெற்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  சென்னை:

  சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிப்பதற்கு சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  கொள்ளை கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டபோது குறி தவறி குண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மீது பட்டுவிட்டது. கொள்ளையர்களை பிடிக்க சென்ற தனிப்படை போலீசில் இடம்பெற்றிருந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர்தான் அவரது துப்பாக்கியால் சுட்டுவிட்டார் என்பது பின்னர் தெரியவந்தது.

  முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் பணியாற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுரை தெற்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் பட்டியலில் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகரும், கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் சம்பத்தும் இடம்பெற்றுள்ளனர். பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய கலியசுந்தரம் என்ற இன்ஸ்பெக்டர் சென்னை நகர போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.  #tamilnews
  Next Story
  ×