என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரத்தில் சரக்கு வேன் - தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாமல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. அதில் பயணம் செய்த 7 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story






