என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்த நாகம்மாவிற்கு கலெக்டர் பாராட்டு
Byமாலை மலர்6 Feb 2018 10:44 AM GMT (Updated: 6 Feb 2018 10:44 AM GMT)
வேதாரண்யம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து இருப்பதை கண்டுபிடித்த பள்ளி துப்புரவு பணியாளர் நாகம்மாவிற்கு கலெக்டர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு, வழியான்செட்டிகட்டளை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவ-மாணவிகளின் குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் துப்புரவு பணியாளர் நாகம்மாள் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி காலை பள்ளிக்கு வந்தார். அப்போது, குடிநீர் தொட்டிக்கு அருகே விஷ மருந்து பாட்டிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் வடிவேலிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியரும் பள்ளி மாணவர்களும், குழாயை திறந்து பார்த்தபோது தண்ணீர் வெள்ளையாக வந்தது. இதனால் யாரும் தண்ணீரை அருந்தவில்லை. இதுகுறித்து காரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று குடிநீர் தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பள்ளியின் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததால் பள்ளிக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம கும்பல், குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வேதாரண்யத்தில் இருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த குடிநீரை பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பல உயிர்களை உரிய நேரத்தில் காப்பாற்றிய துப்புரவு பணியாளர் நாகம்மாளை குடியரசு தின நிகழ்ச்சியின் போது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டினர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் சி.சுரேஷ் குமார் நாகம்மாளை நேரில் அழைத்து பாராட்டினார். #tamilnews

Next Story
×