என் மலர்
செய்திகள்

நாகையில் 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
நாகையில் 1 கிலோ கஞ்சாவுடன் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
நாகை வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி மஞ்சுளா(வயது35). இவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது.
இதன்பேரில் நாகை ஏ.எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பலருக்கும் வாடிக்கையாக கஞ்சா விற்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது வீட்டிற்குள் ஒரு கிலோ அளவில் கஞ்சா பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் மஞ்சுளாவை நாகை வெளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






