என் மலர்

  செய்திகள்

  ரூ.120 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் விலை 40 ரூபாயாக சரிவு
  X

  ரூ.120 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் விலை 40 ரூபாயாக சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.120 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

  சென்னை:

  கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சின்ன வெங்காயம் கடந்த மாதம் ரூ.120-க்கு விற்பனையானது. அதன் பிறகு விலை குறையத் தொடங்கியது.

  இந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

  இதேபோல் தக்காளி விலையும் மிகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது.

  அதிக விளைச்சல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இதனால் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

  பெரிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.15 முதல் ரு.20 வரையும், அவரைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும், முள்ளங்கி ரூ.10 முதல் ரு.15 வரையும், முட்டைகோஸ் ரூ.10 முதல் ரூ.15வரையும் விற்கப்படுகிறது.

  கேரட் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையும், பீட்ரூட் ரு.15 முதல் ரூ.20 வரையும், வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும், பீன்ஸ் ரூ.25 முதல் ரூ.30 வரையும், புடலங்காய் ரூ.15 முதல் ரு.20 வரையும், உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.25 வரையும், காலிபிளவர் ரூ.10 முதல் ரூ.20 வரையும் விற்கப்படுகிறது. #tamilnews

  Next Story
  ×