என் மலர்

    செய்திகள்

    எட்டயபுரத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    எட்டயபுரத்தில் தொழிலாளி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எட்டயபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 29). கூலி தொழிலாளி. இவரது மனைவி கனகஈஸ்வரி. இவர்களுக்கு ஆதி திவாகர் என்ற 1 வயது மகன் உள்ளான். காளிதாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளிதாஸ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியான காளிதாஸ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×