என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 2622 பேர் மீது வழக்கு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 2622 பேர் மீது வழக்கு

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 2622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத் தில் குற்றங்களை தடுக்க வாகன சோதனை நடத்து மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின் மற்றும் தில்லை நடராஜன் மேற்பார்வையில்,மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை திடீர் வாகன சோதனை நடை பெற்றது.

    இதில் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 89 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 906 வழக்குகளும்,அதிக வேகத்தில் சென்றதாக 26 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் ஷீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 526 பேர் என 2622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ. 2 லட் சத்து 73 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது . இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×