என் மலர்

  செய்திகள்

  குன்னூர் அருகே தனியார் பஸ் மோதி கொத்தனார் பலி
  X

  குன்னூர் அருகே தனியார் பஸ் மோதி கொத்தனார் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குன்னூர் அருகே தனியார் பஸ் மோதி கொத்தனார் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  குன்னூர்:

  நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பக்தவச்சலம் (35). கொத்தனார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

  பர்லியாறு பகுதியில் வந்த போது முன்னால் ஒரு கார் சென்றது. அதே சமயத்தில் தனியார் பஸ் வந்தது. இந்த பஸ் காரை முந்த முயன்ற போது பக்தவச்சலம் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

  இதில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பக்தவச்சலம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆனதால் உடல் அங்கே வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  Next Story
  ×