என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாட்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 24). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வந்தபோது அந்தவழியாக சென்ற தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயபிரகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி பஸ் டிரைவர் வடிவேலுவை கைது செய்தார். #tamilnews
Next Story






