என் மலர்
செய்திகள்

திருமானூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருமானூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள திருமழபாடி சாலையோரத்தில் புதிய டாஸ்மாக் கடை கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. மஞ்சமேடு கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் கடை மூடப்பட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட அந்த டாஸ்மாக் கடை மீண்டும் கடந்த டிசம்பர் 31-ந்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மஞ்சமேடு கிராமமக்கள் அக்கடையை அகற்ற கோரி திருமழபாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கலால் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரிகள் சிவக்குமார், கண்ணகி, வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று கிராமமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
Next Story






