என் மலர்

    செய்திகள்

    திருபுவனை அருகே கோஷ்டி மோதலில் மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம்
    X

    திருபுவனை அருகே கோஷ்டி மோதலில் மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருபுவனை அருகே ஏற்பட்ட மோதலில் மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே நல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் அஞ்சலாட்சி. இவரது மகன் விஜயன். சம்பவத்தன்று இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திரகேசன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜயன் மீது ஆத்திரத்தில் இருந்த சந்திரகேசன் அவரை தாக்க கையில் இரும்பு பைப்புடன் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் விஜயன் இல்லை. அவரது தாய் அஞ்சலாட்சி மட்டும் இருந்தார். அஞ்சலாட்சி காரணத்தை கேட்டுகொண்டு இருக்கும் போதே அவரை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு சந்திரகேசன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அஞ்சலாட்சி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே அஞ்சலாட்சி தாக்கப்பட்டதை அறிந்த விஜயன் மற்றும் இவரது அண்ணன் மகன் சுரேஷ்(18) உறவினர் தீர்த்தமலை (38) ஆகியோர் ஆத்திரம் அடைந்து தடி மற்றும் இரும்புபைப், உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று சந்திரகேசனை சரமாரியாக தாக்கினர். இதில் சந்திரகேசன் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருபுவனை போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×