என் மலர்

    செய்திகள்

    ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து தொழிலாளி பலி
    X

    ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்து போனார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பெலத்தமடுவு என்ற பகுதியை சேர்ந்தவர் சவுடப்பா (வயது 48). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், ஓசூர் அருகே பத்தலபள்ளி முஸ்லிம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். சவுடப்பாவிற்கு வலிப்பு வந்ததால் அவர் தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து இருக்கலாம் என்றும், மின்சாரம் தாக்கியதாகவும், விஷவாயு தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக, ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×