என் மலர்
செய்திகள்

ஒக்கி புயலால் கடும் பாதிப்பு: குமரியில் மத்தியகுழு ஆய்வு
ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் 3 பிரிவாக பிரிந்துச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
ஒக்கி புயல் கடந்த 30-ந்தேதி குமரி மாவட்டத்தை தாக்கியது. இந்த புயலால் குமரி மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் ஏராளமான தென்னை, ரப்பர், வாழை, நெற்பயிர் என்று சேதம் அடைந்து விவசாயத்தை நிலைகுலைய செய்து விட்டது.
மேலும் குமரி மீனவர்கள் பலரும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி பலியாகி விட்டனர். அவர்களில் பலரது உடல்களும் அடையாளம் காண முடியாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பது இதுவரை கண்டு பிடிக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் மீனவர்களை இழந்து அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்கனவே பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறி சென்று உள்ளனர்.

இந்த நிலையில் ஒக்கி புயல் தாக்கி ஒரு மாதம் ஆகும் நிலையில் மத்திய குழுவினர் ஆய்வு பணிக்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் இடம் பெற்றுள்ளார்.
மேலும் குழுவில் புதுடெல்லி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்துறை துணை இயக்குனர் சுமன், மத்திய கப்பல்துறை அதிகாரி பரமேஸ்வர்பாலி, மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குனர் மனோகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய குழுவினர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் முதலில் கொல்லங்கோட்டிற்கு சென்றனர். அங்கு கொல்லங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியில் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் சாய்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பெடி, மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறைவாரியாக அதிகாரிகளிடம் ஒக்கி புயல் பாதிப்பு பற்றி மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர். அப்போது ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி தமிழக அதிகாரிகள் குழுவினர் ஏற்கனவே தயார்செய்து வைத்திருந்த அறிக்கையை மத்திய குழுவினரிடம் அவர்கள் வழங்கினார்கள்.
அதன்பிறகு மத்திய குழுவினர் 3 பிரிவாக பிரிந்துச் சென்று குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீனவர்கள், விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
தூத்தூரில் உள்ள புனித யூதாததேயு கல்லூரிக்குச் சென்ற மத்திய குழுவினர் ஒக்கி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரையும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தை எடுத்துக்கூறி கண்ணீர் விட்டு கதறினார்கள். அதைத் தொடர்ந்து வள்ளவிளை பகுதிக்குச் சென்ற மத்திய குழுவினர் அங்கு புயலால் இடிந்த வீடுகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பிற்பகலில் விவசாய பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட கல்படி ஏலா, பெரியகுளம், பத்மநாபபுரம் அருகே உள்ள மருந்துக்கோட்டை, சுருளோடு, ஈசாந்திமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மத்திய குழுவினர் ஆய்வு செய்கிறார்கள். அப்போது பயிர் சேதங்கள், மின் சேதங்கள், சாலை சேதங்களை ஆய்வு செய்கிறார்கள்.
அப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் மத்திய குழுவினர் சேதங்கள் குறித்து கேட்டறிகிறார்கள். மேலும் நாளையும் 2-வது நாளாக குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒக்கி புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

Next Story