என் மலர்
செய்திகள்

வாலாஜா அருகே கோதண்டராமர் கோவிலின் ஐம்பொன் சிலை திருடு போனதா?
வாலாஜா அருகே கோதண்டராமர் கோவிலில் இருந்த கிருஷ்ணர் ஐம்பொன் சிலை திருடு போயி உள்ளதா? என்று போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
காட்பாடியில் வைக்கப்பட்டிருந்த சாத்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலின் ஐம்பொன் சிலை மாயமாகியுள்ளது. அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் கிராமத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது. கோவிலின் பாதுகாப்பு அறையில் ராமர், சீதை, லட்சுமணர், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகளின் ஐம்பொன் சிலைகள் இருந்தன. மேலும் இதே ஊரில் உள்ள மற்ற கோவில்களுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த கோவில் தொடர்பாக ஊரில் உள்ள இரு தரப்பினர் இடையே தகராறு இருந்துள்ளது. கோவில் சாவியை இரு தரப்பினரும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் வழிபாட்டில் பிரச்சினை இருப்பதாக அறநிலையத்துறை ஆணையாளரிடம் கடந்த அக்டோபர் மாதம் கிராம மக்கள் அறநிலையத்துறை ஆணையாளரிடம் புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வி கடந்த அக்டோபர் 18-ந் தேதி இந்த கோவிலை ஆய்வு செய்தார்.
அப்போது கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் படி அந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் அனைத்தும் காட்பாடியில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் காட்பாடியில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை ஆய்வு செய்த போது கிருஷ்ணர் சிலை மாயமாகி இருந்தது. அதற்கு பதில் லட்சுமணர் சிலை மாற்றி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சாத்தம்பாக்கம் கிராமத்தில் கோவிலை நிர்வகித்தவர்கள், கிராம மக்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆய்வாளர் முத்தமிழ்செல்வி விசாரணை மேற்கொண்டார். அதில் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணர் சிலை காணாமல் போனதாக வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலையை யாராவது திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story